Thursday, April 16, 2009

ஏப்பம்.


மண்ணிலிருந்து
விண்நோக்கிப் பறந்து
அங்கிருந்து குறி பார்த்து
நேராக வந்து

கொத்தித் திரியும்
கோழிக்குஞ்சை
கெளவிக்கொண்டு
போகும் கழுகு போல்..

ஏதுமறியா அப்பாவி
மழலைகள்கூட
கழுகுகள் பசிக்கு இரையாகி
காலத்தை முடிப்பது
கல்லறையில் எழுதப்படவில்லை
கண்ணீரால் மட்டும் எழுதப்படுகின்றது.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

Wednesday, April 15, 2009

மனிதா..மனிதா.

மனிதா மனிதா
இனியும் அழுதல் முறையா
உதிரம் சிந்தி
கதறும் தமிழினம்..

தவிக்கும் நிலையை
கொதிக்கும் மனங்கள்
மாற்றியமைப்போம்..

தமிழினத்தின் இரத்த வாடையை
சுவாசிக்கும் பித்துப்பிடித்த
பிக்குக்கூட்ட சாதிகளுக்கு..

ஒட்டுமொத்த
புலம் வாழ் தமிழர்கள்
கட்டியெழுப்பும்..
தர்மத்திற்கு வழி கண்டு
விடைகொடுப்போம்.

மனிதா மனிதா
இனியும் அழுதால்
முறையா..?

ஏன் இந்தக்கொடுமை...???


அள்ளி அள்ளிக் கொடுத்த
கரங்கள்..இன்று..
அடுத்தவன் கஞ்சிக்கு
அகதிகளாய் அநாதைகளாய்..
காணும் காட்சி..
கண்களில் கசிகிறதே..

பிஞ்சு நெஞ்சங்கள்
கொதிக்கும் மணலில்
தவிக்கும் தவிப்புக்கூட
ஆதிக்கம் செலுத்துபவன்
கண்ணுக்கு விருந்தாகயிருக்கின்றதே..

மனிதநேயம் மறைந்து விட்டதா..?
தமிழினம் படும் நிலை
கண்டும் காணாதது போல
கண்மூடித்தனமாக இன்னும்
அயல் நாட்டார் தூங்குவது போல்
நடிப்பதும் ஏனோ..???

வீதியிலே உறங்கவும்
பாதியிலே வாழ்வை
முடிக்கவும் தானா..
இவர்கள் தலைவிதி..?
நாதியற்றுப் போயிருக்கும்
உறவுகளை காப்பாற்ற
நல்ல மனம் ஒன்றாவது உதவுமா..?

Tuesday, March 17, 2009

ஆழ்ந்த அநுதாபங்கள்..‏(குமாரவிநாயகம்.)


உருவத்தில் சிறியவராய்..
உள்ளத்தில் மிகப் பெரியவராய்..
வாழ்ந்த தேசப்பற்றாளர்
அமரர் தி: குமாரநாயகம் அவர்களுக்கு..

வாழ்த்துரை வடிக்க
வரம் வேண்டும்
என நினைக்க..

நிரந்தரமாய் நீ வரம் கேட்டு
நின்மதியாய் போனதென்ன..?

நீளும் எம்மின அழிவை
நினைந்தே நீயூம்..
தாங்காத துயரத்தில்..
நோய் வந்து வாட்டி..
விண்ணுலகம் போனாயோ..

அமைதியின் சொரூபமாய்..
அணையாத ஜோதியாய்..
அனைத்து தமிழ் நிகழ்விலும்..
சுடராய் ஒளி தந்தவரே..

இன்று எம்மை
இருளாக்கி நீ போனதென்ன..?

மாபெரும் சபை நடுவே நீ
மனிநேயத்தோடு மக்களுக்காக தொண்டாற்றியபடியாலோ..
உன் இறப்புச் செய்தியும் மாபெரும்
மக்கள் கூட்டத்தில் வைத்தே
அறிவிக்கப்பட்டதோ...

அதிலும் ஒரு பெருமைதான்..

உயிர்பலிகொடுத்த தாயகத்து மக்களுக்காய்..
கொடி பிடித்தோம்...
அதே துயரத்தோடு உன் பிரிவுக்கும்..
வருத்ததுடன் செவி மடுத்தோம்..

இறந்தாலும் வாழும் மனிதர்களில்
குமரா நீயும் ஒருவன்..

உன்னைப்பிரிந்து
துயரத்தில் வாடும் அன்பு மகேஸ் அக்கா மற்றும்
உற்றார் உறவினர்களுக்கு
வன்கூவர் மக்கள் சார்பில்
ஆழ்ந்த அநுதாபங்களும் ஆறுதல்கள்
வேண்டி இறைபிரார்த்தனைகளும்.


(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது. )

கண்ணீர் அஞ்சலி.‏




குருதி குடிக்கும் அடங்கா அசுரனின்
அதிரடித் தாக்குதலால்
ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள்..
அன்றாடம் தம் உயிர்களை
தணல் தெறிக்கும் எறிகணைக்
குண்டுகளுக்கு இரையாகி விடுகின்றனரே..

தினம் வதைப்பட்டு
பிணக்குவியலில்
கூடாரமிட்டு
கூச்சலிட்டு அழக்கூட முடியாத
எமமினம் அழிகப்பட்டு
அவதியுறும் நிலை மாற

எரியும் உடலின் சாம்பலில் இருந்து
மலரும் தமிழீழம் என
உறுதிகொண்டு மடியும்
அந்த அப்பாவித்தமிழர்களின்
இன்னல்கள் வெகுவிரைவில்
துடைக்கப்பட்டு..

கண்களையும் காதுகளையும்..
பொத்திக் கொண்டு
எம்மினமழிவதை தடுக்காமல்..
ஏதேதோ நொண்டிச் சாட்டுச் சொல்லும்..
அவர்களைப் போல கருணையுள்ளம் படைத்த
கடவுளே கல்லாய் நாம் வழிபட்டதனாலோ
கல் மனதாய் விழி திறக்காதிருக்கின்றாய்..?

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட
அன்பான எம் தமிழ் உறவுகள்
அனைவருக்கும் அவர்கள் உயிர்ககளைப்பிரிந்து வாழும்..
ஒவ்வொரு உறவுகளுக்கும்
இங்கிருந்து நாம் பிரார்த்தனையும்
ஆழ்ந்த அநுதாபங்களையும்
வார்ததைகளை
மட்டும் தான் வார்க்க முடியும்.

(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது.)

Monday, February 23, 2009

தீராத கொடுமை தீருமா...?





தீராத கொடுமையை

தீர்த்துவைக்க யாருமே இல்லையா


ஆயிரமாயிரம் அப்பாவிகள்

அன்றாடம் அழிகின்றனரே..

ஆண்டவா இதற்கு ஒரு தீர்ப்பில்லையா..


மெலிந்த உடலும்..

கசிந்த மனமும்..

குருதி வடியும் கண்ணீரும்..

பதுங்கு குழிகூட

பாதுகாப்பு இன்றி


வேதனையின் விளிம்பில்

வெந்து மடியும்

எம் மினம்..


மனித வாழ்க்கை இல்லாது இருந்தும்

கால் நடையாக வாழத்தனிலும்

ஒரு சுதந்திரம் கூடஇல்லையே..


எம் தமிழனப் படுகொலைகள்

உலகக் கண்களுக்கு மட்டும் ஏன்

இருளாகவே இருக்கின்றதே...


நித்திம் நித்தம் சாவை எதிர் நோக்கி

நிர்மூலமாகும் எம் மக்களுக்கு

நீதி தேவதை கண்திறக்காதோ..


தீராத கொடுமையை

தீர்த்து வைக்க யாருமே இல்லையா..?

தீயில் வெந்து துடிக்கும் அப்பாவிகளுக்கு..நல்ல

தீர்ப்பு வழங்க எவருமே வரமாட்டார்களா..?

Wednesday, February 11, 2009

முடிவில்லா தொடர் நிலை










விட்டுத்துரத்தும் குண்டு மழைக்குள்..
பட்டுப்போன மரமாய்
பகல் இரவாக பதுங்குவதற்கு
குழியுமின்றி...

விழிகளிரண்டில்
வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கரமும் இன்றி..

வாழ்வு முடிந்து விட்டது என ஏங்க..
முடிந்த இடத்தில் மீண்டும் ஓர் செல் விழ..
விழ விழ எழ முடிந்தும் முடியாதவர்களாய்..
வாழ்வின் விரக்தியில்

முடிந்து கொண்டிருக்கும்..சொந்தங்களுக்கு..
உதவிக்கரம் நீட்டும் என நம்பியிருந்த
அயல் நாடும்..
அநியாயம் இழைக்கின்றதே.