Wednesday, April 29, 2009

தியாகத் தீபமே..மெழுகாய் உருகாதே..



நித்திய தீர்வு பெற..
சத்தியம் செய்து..
பட்டினி கிடந்து
உத்தமன் உன் உயிரை
பணயம் வைத்து

இன்று எத்தனை நாளாகிற்று..?
எவராவது கேட்டார்களா..?
இன்னும் இருட்டறைக்குள் உலக வல்லரசுகள்..
இது வரையில் யாருமே கண்டு கொள்ளவில்லையே

எங்கேஉன்னை இழந்துவிடப்போகிறோமோ என
எத்தனை இலட்சக்கணக்கான தமிழர்கள்...
அத்தனை மக்களும் உன்னை இழக்கவிரும்பவில்லை..
தீலிபன் அண்ணா இறந்த துயர் இன்னும் மறக்கவில்லை..

மேலும் துயரை தந்திடாதே பரமேஸ்வரா..
எழுந்து நீயும் நடைபோடு..
துணிந்து நீயும் போராடு..
மடிந்து போகும் எம்மினத்தைக்காக்க..

மடிந்து நீயும் போவதால்..
தீர்ந்து போகும் பிரச்சனையல்ல..இது..
எழுந்து நீயும் வரவேண்டும்..
கண்ணீரோடு நாமிருக்கிறோம்..

தண்ணீர் அருந்திவிடு..
தமிழீழம் நெருங்கும் நேரத்தில்..
தவித்து நீயும் மடியவேண்டாம்..

எழுந்து வா சகோதரனே..
எழுந்து வா...
தியாகத் தீபமே..மெழுகாய் உருகாதே..
சுடராய் எழுந்து வா.

Tuesday, April 21, 2009

கண்களில் வழிகின்றது உதிரம்.



கண்களில் வழிகின்றது உதிரம்.

தீராத கொடுந் துயரம்..

Monday, April 20, 2009

தீக்குளிக்க யாரும் போகாதீங்க..‏



தீக்குளிக்க யாரும் போகாதீங்க..
தீயவனுக்கு மனிதநேயம் கிடையாதுங்க..
தீ குளிப்பதால் தீர்வு கிடைக்காதுங்க..

தீமைகளை தட்டிக்கேளுங்க..
தீர்வு கிடைக்கும் வரை குரல் எழுப்புங்க..
தீயவன் எம்மினத்தை அழிக்கின்றான்..

தீராத கொடும் இனமழிப்பைத் தொடர்கின்றான்..
தீக்குளித்து உங்கள் உடல் கருகுவதால்...
தீயவன் காதுகளுக்கு தேனான செய்தியாகின்றதுங்க..

தீயில் எம்மினம் கருகியது போதுமங்க..
தீவினை அகற்ற குரல் ஓங்கி எழுப்புவோமுங்க..
தீந்தமிழ் நிலைபெற ஓயாது பாடுபடுவோமுங்க..

தீக்குளிக்க யாரும் போகாதீங்க..

Friday, April 17, 2009

Ottawa Tamils Protest for Freedom - April 2009



கருணை உள்ளங்களே..
கொஞ்சம் கதைவைத் திறவுங்களேன்..
மிச்சமுள்ள தமிழினத்தைக்
காப்பாற்ற..

எங்கள் கதையைக் கேளுங்களேன்..

Thursday, April 16, 2009

கொடுமை..



மரம் நாட்ட.
மண் தோண்ட..
பிண வாடை..

தோண்டும் இடம் எல்லாம்..
மனித உடல்கள்...
மரம் நாட்டத் தேவையில்லை..
மனிதம் புதைக்கப் பட்ட பொழுது..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

ஏப்பம்.


மண்ணிலிருந்து
விண்நோக்கிப் பறந்து
அங்கிருந்து குறி பார்த்து
நேராக வந்து

கொத்தித் திரியும்
கோழிக்குஞ்சை
கெளவிக்கொண்டு
போகும் கழுகு போல்..

ஏதுமறியா அப்பாவி
மழலைகள்கூட
கழுகுகள் பசிக்கு இரையாகி
காலத்தை முடிப்பது
கல்லறையில் எழுதப்படவில்லை
கண்ணீரால் மட்டும் எழுதப்படுகின்றது.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

Wednesday, April 15, 2009

மனிதா..மனிதா.

மனிதா மனிதா
இனியும் அழுதல் முறையா
உதிரம் சிந்தி
கதறும் தமிழினம்..

தவிக்கும் நிலையை
கொதிக்கும் மனங்கள்
மாற்றியமைப்போம்..

தமிழினத்தின் இரத்த வாடையை
சுவாசிக்கும் பித்துப்பிடித்த
பிக்குக்கூட்ட சாதிகளுக்கு..

ஒட்டுமொத்த
புலம் வாழ் தமிழர்கள்
கட்டியெழுப்பும்..
தர்மத்திற்கு வழி கண்டு
விடைகொடுப்போம்.

மனிதா மனிதா
இனியும் அழுதால்
முறையா..?

ஏன் இந்தக்கொடுமை...???


அள்ளி அள்ளிக் கொடுத்த
கரங்கள்..இன்று..
அடுத்தவன் கஞ்சிக்கு
அகதிகளாய் அநாதைகளாய்..
காணும் காட்சி..
கண்களில் கசிகிறதே..

பிஞ்சு நெஞ்சங்கள்
கொதிக்கும் மணலில்
தவிக்கும் தவிப்புக்கூட
ஆதிக்கம் செலுத்துபவன்
கண்ணுக்கு விருந்தாகயிருக்கின்றதே..

மனிதநேயம் மறைந்து விட்டதா..?
தமிழினம் படும் நிலை
கண்டும் காணாதது போல
கண்மூடித்தனமாக இன்னும்
அயல் நாட்டார் தூங்குவது போல்
நடிப்பதும் ஏனோ..???

வீதியிலே உறங்கவும்
பாதியிலே வாழ்வை
முடிக்கவும் தானா..
இவர்கள் தலைவிதி..?
நாதியற்றுப் போயிருக்கும்
உறவுகளை காப்பாற்ற
நல்ல மனம் ஒன்றாவது உதவுமா..?