Tuesday, March 17, 2009

கண்ணீர் அஞ்சலி.‏




குருதி குடிக்கும் அடங்கா அசுரனின்
அதிரடித் தாக்குதலால்
ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள்..
அன்றாடம் தம் உயிர்களை
தணல் தெறிக்கும் எறிகணைக்
குண்டுகளுக்கு இரையாகி விடுகின்றனரே..

தினம் வதைப்பட்டு
பிணக்குவியலில்
கூடாரமிட்டு
கூச்சலிட்டு அழக்கூட முடியாத
எமமினம் அழிகப்பட்டு
அவதியுறும் நிலை மாற

எரியும் உடலின் சாம்பலில் இருந்து
மலரும் தமிழீழம் என
உறுதிகொண்டு மடியும்
அந்த அப்பாவித்தமிழர்களின்
இன்னல்கள் வெகுவிரைவில்
துடைக்கப்பட்டு..

கண்களையும் காதுகளையும்..
பொத்திக் கொண்டு
எம்மினமழிவதை தடுக்காமல்..
ஏதேதோ நொண்டிச் சாட்டுச் சொல்லும்..
அவர்களைப் போல கருணையுள்ளம் படைத்த
கடவுளே கல்லாய் நாம் வழிபட்டதனாலோ
கல் மனதாய் விழி திறக்காதிருக்கின்றாய்..?

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட
அன்பான எம் தமிழ் உறவுகள்
அனைவருக்கும் அவர்கள் உயிர்ககளைப்பிரிந்து வாழும்..
ஒவ்வொரு உறவுகளுக்கும்
இங்கிருந்து நாம் பிரார்த்தனையும்
ஆழ்ந்த அநுதாபங்களையும்
வார்ததைகளை
மட்டும் தான் வார்க்க முடியும்.

(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது.)

No comments: