தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எங்கள் அன்பிற்கும், மதிப்பிற்கும், உரிய மாவீரர்களையும், போராட்ட காலங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களையும், இந்நேரத்தில் நினைவு கூறுவதுடன்...2.11. 2007 அன்று சிங்கள வான் படைத்தாக்குதலில் வீரச்சாவடைந்த..
தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர்...பிரிகேடியர்...சு.ப. தமிழ்ச்செல்வன், லெப்டினன் கேணல்..அன்பு மணி எனப்படும் (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப்டினன், ஆட்சி வேல், லெப்டினன், மவைக்குமரன் உட்பட அன்மையில் அநுராதபுர வெற்றிகர சமரில் தம் உயிர்களை தமிழுக்காய் அர்பணித்த 22 கரும்புலி போராளிகளுக்கும், ... என் கண்ணீர் அஞ்சலிகளும், கவிதையும் சமர்ப்பணம்.
************************************************************************************
செல்வத்திலும் செல்வனே
தமிழ் அன்னை பெற்ற
அன்புத் தமிழ்ச்செல்வனே..
உன்னைப் பிரிந்து
உலகம் கலங்குதய்யா...
மெய்யாகிவிட்ட செய்தி
பொய்யாகிப்போகாதோ என்றே
கையேந்தி இறைவனிடம் கேட்டழுதோம்
நாளாகியும் பலனில்லை நமக்கதற்கு..
நோயாகி நீ சரிந்திருந்தால்
சற்று மனம் ஆறியிருப்போம்...ஆனால்
சண்டாள கும்பல்கள் உன்னை..வீணாக
வான் குண்டுபோட்டுத் தாக்கியதை நினைத்தால்
எப்படி எம்மனம் ஆறும்..?
எப்படி ஐயா எம் மனம் ஆறும்...?
ஐயா தமிழ்ச்செல்வனே உந்தன் உடலை
மட்டும்தான் நாம் இழந்தோம்
உயிரை இழக்கவில்லை
நாம் உங்கள் உயிரை இழக்கவில்லை..
அன்புக்குத் தாயாக
அறிவுக்கு தந்தையாக
அண்ணன் வழி நடக்கும் தம்பியாக
உலக தமிழ் மக்களுக்கெல்லாம்
உன்னத மகா உத்தமனாக
உன்னைப் போற்றிப்போற்றி
உன் புன் சிரிப்பில் எம்
உள்ளம் கொள்ளை கொண்டு மகிழ்ந்தோம் செல்வனே..
இனிக் காண்போமா...அந்த
புன் சிரிப்பு செல்வமைந்தனை..?
பகைவன் கூட உன்னைப்பார்த்தே
பேசக் கற்றுக்கொண்டான்..
மழலைகூட உன்னிடம் தான்
கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பை
கடன் வாங்கிக் கொண்டிருக்கும்..
ஏன் பூக்கள் கூட உன் முகம் கண்டுதான்
தம் இதழ் விரித்திருக்கும்..
வீசும், காற்றும் பேசும் மொழியும்
உன்னிடம்தான் குளிர்மையை பெற்றிருக்கும்..
என்னத்தை எடுத்துச்சொல்லி என்ன பலன்..
முன்னை நடந்ததை மறக்கமுடியவில்லை..
கன் முன்னே உன் திருமுகம் காட்சிதந்து
எம் இனத்தில் நீ கொண்ட அந்த அரசியல் ஆட்சியின்
திறமைகளை அடுக்கடுக்காய்ச் சொல்ல வார்த்தையில்லை
தமிழுக்காய் தம் தம் உயிரை
தமிழ் மண்ணுக்காக விதைத்திட்ட
தம்பிமார்கள்
அலெக்ஸ், மிகுதன், கலையரசன்,
ஆட்சிவேல், மாவைக்குமரன்..
ஆகியோர்..
தனியாக நீ செல்லத் தடையாக
துணையாக தம்பிமார் 5 வரும்
கூடவே வந்து உறுதுணையாய்
கடமையுணர்வாய் உன்னை காத்து தம்மை
மாய்த்துக்கொண்டனரே...
கூடவே பிறக்காவிட்டாலும்..
தமிழ்த்தாய் வளர்த்த சொந்தங்களை
பிரிந்து தவிக்கிறோம்...எல்லோரையும் நினைத்து
உள்ளம் கொதித்து அழுகிறோம்..
அநுராதபுரம் வெற்றி கொண்டோம்..
அதில் 22 தமிழ் செல்வங்களின்
உடல் பிரிந்தோம்..
தமக்கென எதுவும் எண்ணாது
தமிழுக்காய் தம் உயிரை வித்திட்ட
தமிழன்னை பெற்ற மக்களையும்
இந் நேரத்தில் ஐயா உன்னோடு அவர்களுக்கும்
இருகரம் கூப்பி வாழ்த்தி வீர வணக்கம் செலுத்துகிறேன்..
தோல்வியைத் தழுவிக் கொண்ட அரக்க ராணுவம்..
கோழைத்தனமாய் தன் உடல் பசிக்கு
தமிழ் இன மொழியை உணவாக்கிக்கொண்டதே...
கனவுகள் மட்டும் காணலாம் அவர்கள்..
நினைவுகளையும் நிஜங்களையும் ஆள்பவர்கள்
நாங்களாகத்தான் இருக்கமுடியும்..
கேட்டுப் பெற்று கிடைக்காது சுதந்திரம்.
போட்டுத் தாக்கி எடுப்போம் தினம் தினம்..
உள்ளம் கொதிக்க ஒன்று
மட்டும் உறுதியாகச் சொல்லுகிறேன்
புத்திகெட்ட சிங்கள நரிகளுக்கு
கத்தி கழுத்தை நெருங்கும் காலமிது...
கதறியடித்து துடித்து தஞ்சம் என
தமிழர் காலடியில் கதியாக கலங்கி
காத்திருப்பார் காப்பாற்றுங்கள் என்று..
பேச்சோடு கவிதையோடு நிறுத்திவிட
மாட்டேன்..நான்..
முச்சிருக்கும் வரைக்கும்
தமிழுக்குத் தனி ஆட்சி கிடைக்கமட்டும்
தயங்காது தலைநிமிர்ந்து செயல்படுவேன்
உங்களோடு நானும்..
அண்ணன் வழி நடப்போம்..
அவருக்கு உறுதுணையாய் நாமும் தமிழீழம்
காணும் வரை செயல்படுவோம்...
( அழுதாலும் ஆறாது எமதுள்ளம்
தீராது தமிழீழம் காணும் வரை...ஒரு போதும்
ஓயாது போராட்டமும்
ஒரு நாள் தீரும் ஈழம் கிடைக்கும்
காலம் அது வெகுதூரமில்லை
படைகள் நெருங்கியபோதும்..
பதுங்காது புலியும் பாய்ந்தே அதைக்கொள்ளும்..
தீப்பந்தம் சரிந்தாலும் தீச்சுவாலை
தலை நிமிர்ந்தே ஒளி வீசும்.
நாளைய பொழுதில் நம்பிக்கை கொண்டு
வாழ்வோம் தமிழ் தேசப்பற்றாய் ஒற்றுமையாய் நாமும்.)
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment